ரௌத்திரம் பழகு

செம்பவளம் குழம்பாக்கி பெய்தாற் போலச்
செங்குருதி ஆறாக , அகடியமிழைத்த ஈழபிரசண்டன் ;
நம்மீழன் அழன்கன்டதும் காலம்காணா குரூரம் ;
இந்நாளிங்கு கையறுநிலையின்றி , ஈயும் பூதபலிக்கு
புல்லகமெல்லாம் புதுநாணயமொட்டி சுடுகாடனுப்பும் புனமொழியிங்கு ;
எவ்வா(ஆ)ரணன் அருள்வான் பூரணன்சக்தி , புஞ்சுதல்
கண்டிடவே ! அந்நாளில் புட்பரசம்பருகிட புதுபிரவேசம்
கண்டிருப்பான் , சிரந்தூக்கி குலவணம் விரட்டிடவே !

எழுதியவர் : த.சிங்காரவேல் (எ) கவிமரவன் (30-Apr-16, 2:05 pm)
பார்வை : 474

மேலே