நட்பின் நுனியில் காதல் பிறந்தது

நட்பின் நுனியில் காதல் பிறந்தது
காதலின் ஊடே மோகம் வளர்ந்தது

மோகத்தின் படிகளில் கைப்பிடித்தோம்
கைபிடித்து இருவரும் அகமகிழ்ந்தோம்

மகிழ்ச்சியின் உச்சத்தில் கொஞ்சினேன்
கொஞ்சி முறுவல் கெஞ்சினேன்

கெஞ்சி மய்யல் கொண்டேன்
மய்யலில் மயக்கம் கொண்டேன்

மயக்கத்திற்கு மூலிகையாய் கட்டில் தந்தாய்
கட்டிலின் முடிவாய் தொட்டில் தந்தாய்

தொட்டிலின் நுனியில் அன்பு வளர்ந்தது
அன்பினூடே மீண்டும் காதல் கனிந்தது.....

Pic courtesy: danasagj.top

எழுதியவர் : சுபா சுந்தர் (30-Apr-16, 3:20 pm)
பார்வை : 454

மேலே