வாக்களிப்போம் உண்மையாக

வருடம் ஐந்தும்
உரிமையுக்கும்...அடிப்படை
உடமைக்கும் போராடியது
போதும் ...

விழித்திடுவோம் ..
சிந்திதுடுவோம்..
உணர்ந்திடுவோம் ..
உணர்த்திடுவோம்..

இன்று ஓர்நாள்
உயர்த்திடுவோம் நம் விரலை
உரிமைக்கும் ,நம் உடமைக்கும்
துணையாக இருக்க
தேர்ந்தெடுப்போம் நல்ல ஒருவரை ...

இலவசத்துக்கு இணங்காமல் ,
பணத்திற்கு மயங்காமல்
ஓர் நல்ல அரசாங்கம் என்பது
தனி நபர் அல்ல -அது
மக்களாகிய நாம்தான் என்பதை
மறவாமல்
வருடம் ஐந்து
போராடுவதை விட்டு விட்டு
நாள் ஒன்று நன்கு
சிந்தித்து -இன்று
நல் மனிதருக்கு வாக்களித்து
நம் நாட்டை காத்து ...
நம் நிலை உயர்த்த
வாக்களிப்போம் உண்மையாக ....

எழுதியவர் : ஜீவன் (30-Apr-16, 3:53 pm)
பார்வை : 1118

மேலே