ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் வேண்டும் உன் எழுத்தில்
அதுவும் மிளிர வேண்டும் உன் வாக்கியத்தில்

அன்பு வேண்டுகோள் வைத்தார் என் நண்பர்
சுப்ரமணியன் அவர் பெயர் என்றார்.

அவரை நேரில் இதுவரை பார்த்ததில்லை
முகநூலின் வழியாய் பழக்கம் தான்

நட்பிற்கு "நேர்முகம்" தேவையில்லை
இருந்தும் ஆனந்தத்திற்கு அதிலே குறைவில்லை.

என் எழுத்துக்கள் சிலவற்றை படித்தவர் தான்
தன் பாராட்டை என்னிடம் பகிர்ந்தவர் தான்.

உன்னால் முடியும் என உரைத்தார்
கண்டிப்பாய் என்று பதிலுரைத்தேன்
அந்த ஊகத்த்தை நானும் உணர்ந்தவனாய்
என் எழுத்தை தொடங்கினேன் ஆனந்தமாய்.

இந்த ஆனந்தன் படைப்பில் ஆனந்தம்
இனி தொடரும் இது என் உத்திரவாதம்.

ஆண்டவன் படைப்பே ஆனந்தம்
இதை உணர்ந்தவர்களோ ஏராளம்.

ஊர்வன பறப்பன மிதப்பன நடப்பன
என எல்லாவற்றிக்கும் பொதுவென
யோசித்து வைத்தான் சரியென
அதுவே ஆனந்தம் என்று புரிந்தன.

ஆண்டவன் சந்நிதி முன்னாலே
நானும் கண் மூடி நின்றேனே
பரவச உணர்வில் மிதந்தேனே
அதுவே ஆனந்தம் ஆனந்தம் என்பேனே.

கருவறை இருட்டு ஆனந்தமே
நம் அங்கங்கள் வளர்வது ஆனந்தமே
சிசுவாய் ஜனிப்பதும் ஆனந்தமே
இவ்வுலகை பார்ப்பதும் ஆனந்தமே

தாயின் கதகதப்பு ஆனந்தமே
தந்தையின் தோளும் ஆனந்தமே
மழலைப் பேச்சும் ஆனந்தமே
நாமும் வளர்வது ஆனந்தமே

உறவுகள் முளைப்பது ஆனந்தமே
எம் உடன்பிறப்பும் ஆனந்தமே
பள்ளிப் படிப்பும் ஆனந்தமே
குருவின் ஆசியும் ஆனந்தமே

தோழனும் தோழியும் ஆனந்தமே
அவர்தம் குடும்பமும் ஆனந்தமே

பருவ வயதும் ஆனந்தமே
திருமண வாழ்க்கையும் ஆனந்தமே

இருவரின் புரிதலும் ஆனந்தமே
தாம்பத்யம் நீள்வதும் ஆனந்தமே

பெற்றோரைக் காப்பதும் ஆனந்தமே
அவர் நம்முடன் இருப்பதும் ஆனந்தமே

ஆரம்பம் முடிவு இரண்டும் ஆனந்தமே
நாம் என்றும் காண்போம் ஆனந்தமே

எங்கும் எதிலும் ஆனந்தம் ஆனந்தமே
அதை நாமும் உணர்வோம் என்றென்றுமே.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (30-Apr-16, 6:14 pm)
பார்வை : 296

மேலே