தசிங்காரவேல் என்கிற கவிமலரவன்- கருத்துகள்
தசிங்காரவேல் என்கிற கவிமலரவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [59]
- மலர்91 [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [20]
- Dr.V.K.Kanniappan [18]
உண்மையாக தொியலாம், இருந்தாலும் நான் என்னுடைய சுயம் என்றாகும் போதோ, எனக்கானது எனும் போது
நான் விருப்பப்படும் ஒருவாின் நலனில் வளா்ச்சியில் அக்கறை கொள்வதும், வளா்ச்சி குறித்து கூறும் போது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. மனிதன் அடுத்தவாின் வளா்ச்சியில் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், உதவ வேண்டும் இதுவே அரோக்கியமான மனநிலை எனவம் அரோக்கியமான சமூகம் என்றாகும் போது விரும்பும் நடிகன் விரும்பும் நபாின் வெற்றி குறித்து மகிழ்வது இயல்பான ஒன்று.
மஞ்சத்தில் விளையாடிய மயிலிறகு பற்றிய பதிவு உணா்வுகள் நிறைந்த ஒன்றாக உள்ளது..சிறப்பு.....
எதை வேண்டுமானாலும் கவிதையாக மாற்றலாம் என்பதிலும் கவிதையாக வாசிக்க இயலும் என்பதிலும் அதி நம்பிக்கை கொண்டவன் நான். கதை சாதாரன பேச்சை கூட கவிதையாக்க வேண்டுமானால் வாசிக்கும் தொனியில் கவிதையாக்கலாம் என்பதையும் எற்கின்றவன்.
யாப்பு என்பதற்கு ஒரு கவிதை எழுதினேன்
யாப்பு யாக்கியவன் எவனடா?
எத்துனை அழகிய உறுப்புக்கள்
எழுத்து அசை சீா் தளை அடி தொடையென
உலகம் யாவையும் யாக்கிய யாப்பு அழகுதான்
கவிதையெனக் கூறும் போதும்
அணிக்கு அணிசோ்தவன் எவனடா...?
என்ற கவிதை சட்டென நினைவுக்கு வந்து போகிறது. ஹைக்கூ என்றால் என்னவென்றெ தெரியாத ஒரு நபராகத்தான் நானும் இருந்தேன்.ஒரு சிறு போட்டியில் நானும் ஹைக்கூ எழுதி இருக்கிறேன்.
யாராவது நான் எழுதியிருக்கிறேன் என சொன்னாலே அதை வாங்கி படிக்கும் இயல்பு கொண்டவன் . யாப்பு புதுக் கவிதை .ஹைக்கூ திரைப்பாடல் மரபுக்கவிதை என எதையும் படிக்கும் இயல்புடையவன். மேலும் ஒரு அன்பான வேண்டுகோள் எனது கவிதைகளை இந்த தளத்தில் வெளியிட விரும்புகிறேன் அதற்கான வழிமுறைகளை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கவிதை என்ற அடையாளப்படுத்திய அனைத்தையும் படிக்கும் ஒரு நபா். என்னை பொருத்த வரையில் கவிதை என்பது படிக்கும் போதும் ஒருவா் வாசிக்கும் போதும் கேட்பவரையும் படிப்பவரையும் மயிர்கால்களை குத்திட வைக்கவேண்டும்.
கவிதை எதற்காக என்பது மாறுபட்ட ஒன்று? கவிதை எழுதுவதன் காரணம் தன்னுள் ஏற்படும் உணா்வுகளை வெளிப்படுத்தும் உயிரோட்டமுள்ள ஆயுதம். எங்கோ எப்போது ஏற்பட்ட மனக்குமறல்களை வெளிப்படுத்தவும் இயலும். ஒரு நிகழ்வினை நேரடியாக தட்டி கேட்க இயலாத ஒன்றை கவிதையில் கேட்க இயலும்.
கவிதையில் ஒருவரை தட்டி எழுப்பவும் இயலும்