அவளும் பெண்மங்கை
யாதுமாகி நின்றாள்
நடையுரு பிணமாய் உடையதொரு பெண்மங்கை
இருநடை கேள்வி தினம்நூறு கண்டாள்
வஞ்சத்தில் பஞ்சம் கண்ட பருவ மங்கை அவள்.
மஞ்சம் பல காணுகின்றாள், துருவம் பல போகின்றாள்,
தஞ்சம் புகும் தரணியெல்லாம் கொஞ்சுதல்குள்ளாகி
மிஞ்சுதலில் அவள் அவ்வப்போது செல்லாக் காகிதம்.
கொடையுரு மனமாய் உடையதொரு மண்மக்கள் வேண்டி
தவமிருகோலத்தில் யாருமின்றி அஞ்சுதலில் யாதுமாகி போகிறாள்.