நெருக்கமாக
நீண்ட வரிசையில்
நடப்பட்டு நிழல் கொடுக்கும்
அந்த பூவரச மரங்களில்
ஏதோ ஒன்றில் தான்
தன் கூட்டைக் கட்டியிருக்கும்
போலிருக்கிறது அப்பறவை
தினமும் தவறாமல்
இந்த வழியாக போவதால்
கொஞ்சம் நெருக்கம்
ஆகிவிட்டது போல் ஒரு
உணர்வு ..
தரையிறங்கி ஒரு முறை
தலை திருப்பி என்னை
பார்த்துவிட்டு போவதால்
கூட இருக்கலாம் ..