இல்லாத ஊருக்கு வழி காட்டும் இலக்கு

ஆளுங் கட்சியை வீழ்த்துவதே இலக்கு என்று
அறைகூவல் விடுத்த கட்சிகள் எல்லாம்
நான்கு அணிகளாய்ப் பிரிந்து நின்று
இலக்கைவிட்டு விலகிச் செல்லும் பாதைகளில்
பயணித்து வாக்குகளைச் சிதறடிக்கும்
அரும்பணியில் அயராது உழைப்பதெல்லாம்
ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்று
அரியணையில் அமர்வதைப் பார்த்து ரசிக்க.
@@@
இது என்ன அரசியல் தந்திரமோ*
சத்தியமாய் நாமறியோம் பராபரமே!

@@
*Diplomacy = நாடுகளுக்கு இடையே உள்ள செயலாண்மைத் திறம். அரசியல் தந்திரம்
நன்றி: Universal Delux Dictionary, P. 460

எழுதியவர் : மலர் (2-Apr-16, 3:13 pm)
பார்வை : 109

மேலே