ஏ சமூகமே காதல்னா என்னான்னு தெரியுமா

ஆதாம் ஏவாள்
காதலிச்சாங்களான்னு
யாருக்கும் தெரியாது தான்..!

ஆனா
நாகரிகம் எல்லாம் இல்லாத
ஆதி மனிதன் வரலாறு
யாருக்காவது தெரியுமா?
ஆணும் பெண்ணும் முதன் முதல்ல
சேர்ந்து வாழ்ந்த கற்காலம்
அண்ணன் தம்பி அக்கா தங்கை
பாசமெல்லாம் இயற்கையாய்
தோன்றிடவில்லை..!

உறவுகள் என்பதும் உணர்வுகள் என்பதும்
அறிந்திடாத அக்கற்காலம்
ஆசை கோபம் அலைக்கழிக்க
கண்டதை உண்டார்கள்;
நாணம் வெட்கம் முறை இன்றி
உறவு கொண்டார்கள்.
அதனால் சிக்கலும் சீரழிவும் வரவே
நாகரிகத்தின் அவசியம் உணர்ந்தனர்..!

ஆம்.,
காதல் ஒன்றும் சிந்து சமவெளி நாகரிகத்திலோ,
மொகன்ஞ்சதரா ஹரப்பாவோவிலோ அல்ல,

மிருகமாய் இருந்தவன்
மனிதனாய் மாறிய தருணத்தில்
மாற வேண்டிய அவசிய காரணத்தால்
எங்கள் காதல் பிறந்தது.

இப்பொழுது சொல்லுங்கள்,

காதலை புரிந்து கொள்ளாத பொழுது
மனிதன் மிருகமாகிறான்.
அந்தக்காலத்தில் மட்டுமல்ல,
இந்த 2016 வருடத்திலும்.

இல்லையெனில்
உடுமலையில்
ஒரு காதல் கலப்பு திருமணத்திற்காக
மனிதர்கள் நிறைந்திருந்த
பகல் பொழுதில்
மிருகங்கள் பார்க்க,
மிருகங்கள் கொல்ல...

ஏ சமூகமே..!
காதல்னா
என்னான்னு தெரியுமா?

எழுதியவர் : செல்வமணி (2-Apr-16, 6:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 93

மேலே