இந்த வார பாக்யா வார இதழில் வந்த படத்திற்கு கவிதைகள் கவிஞர் இரா இரவி

இந்த வார பாக்யா வார இதழில் வந்த படத்திற்கு
கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
-------------------------------------------------------
எல்லோருக்கும் ஆசைதான் அமர
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை !
-------------------------------------
முடிந்து விட்டது மன்னர் ஆட்சி
முடிவுக்கு வந்தது முடியாட்சி
---------------------------
காட்சிப் பொருளாகலாம்
ஆட்சிப் பொருளாக முடியாது !
----------------------------
பலரின் உழைப்பால் உருவானது
பார்வையைக் கவரும் வனப்பானது !
------------------------
தேவையில்லை
இவ்வளவு பெரிய இருக்கை
ஒருவர் அமர !
----------------------------------------
ஆணாதிக்கம் பறை சாற்றும் குறியீடு
எப்போதாவது மட்டுமே அமர
அனுமதித்தது பெண்களை அன்று !
--------------------------------------
சிம்மம் அமரும் ஆசனம்
சில சமயம் குரங்குகளும்
அமர்ந்து விடுகின்றன !
-------------------------------------
கம்பீரமாகக் காட்சியளித்தாலும்
பயன்பாட்டில் இல்லாததால்
வழக்கொழிந்தது !
---------------------------

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Apr-16, 7:16 pm)
பார்வை : 62

மேலே