தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 26 - = 67
இரவு நேரம் இளைய தேகம்
விரகதாப தூபம் போடும்
பருவ ராணி பாத்திரத்தில்
பால் மணிகள் தூது போகும்
மார்கழி குளிர் காலம்
மன்மதங்கள் அதிகரிக்கும்
மைவிழி தூங்காமல்
மதனங்கள் அனுபவிக்கும்
பக்கம் பாத்து - பக்கம் பாத்து
முத்த மழை கொட்டி தீத்து
உச்சி முதல் பாதம் வரை
எச்சில் நீர் தடம் பதிக்கும்..
வீசும் தூண்டிலில் சிக்கும் மீன்
வலியால் துடி துடிப்பது போல்
இன்பம் தூண்டப்பட்ட மனதில்
இளமை துள்ளி விளையாடும்..
அந்தி நெருங்கினாலே
வஞ்சியின் கவனம்தான்
அல்லி பூ பூப்பதும்
நிலவின் ஒளியில்தான்..
மங்கை திருமுகத்தில்
மஞ்சள் பூசும் நேரம்
கங்கை தீர்த்தத்தில்
முகம் அலம்பினால் நலமே!
(கங்கை தீர்த்தத்தை
முகம் அலம்ப தருவேன் )
நம் காதல் இங்கே கனியாகி
இன்ப நாடகம் நடத்தும் பூ தூவி
இளைய மனமும் மனமும் ஒன்றாகி
இனிய மணம் நுகருமே நன்றாகி..!
வெட்கம் என்பது வேண்டாம்
விரக வேட்கையில்
வெளிச்சம் துளியும் வேண்டாம்
கச்சை அவிழ்க்கையில்..!