அறிவுடைமை
யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே
– பழமொழி;
நண்பன் நாகு வருவான் பின்னே
புகை வாசம் வரும் முன்னே
– (தினம் காண்பது கண்கூடு);
இதயத் தசைக்கு
ரத்த ஓட்டம் போதாமல் எப்போதும்
மாரடைப்பு வாய்ப்பு உண்டு தப்பாது;
எத்தனை முறை சொன்னாலும்
புத்தியில் ஏறாது - நுரையீரல்
புற்று நோய்க்கும் வாய்ப்பு உண்டு;
வந்தபின் வெகுகாலம்
உயிர் தங்காது – வருமுன்
காப்பதே அறிவுடைமை!