தனியான பயணம்
தனியான தேசத்தில்
தனியாக வசிப்போமே!
துணைதேடி வருகின்ற
ஒளியை மட்டும் அழைப்போமே!
இரவுகள் வந்தவிட்டால்
இதயத்தில் படபடப்பு!
இங்குள்ள கலவிக்கு
நிலவே துணையிருப்பு!
புரியாத கேள்விகளும்
புரிந்துவிடும் போது
பிடிக்காத காரணங்கள்
பிடித்துவிடும் மாது!
போகின்ற பயணத்தில்
புதிதாக கற்ப்பிப்போம்
பாஷைகள் தீர்ந்திருந்தால்
சைகைகள் பழகிடுவோம்!
உணவுக்கு பஞ்சமின்றி
உதடுகளை பறிமாறலாம்!
உண்ணுகின்ற உதட்டில்
உற்பத்தியாய் காதலாகலாம்!
காலங்கள் கடந்தவுடன்
தோற்றங்கள் மாறிப்போகும்!
தோற்றங்கள் மாறினால்
பாவனைகள் மாறிப்போகும்!
நூறுஆண்டு முடிந்தாலும்
நூறுஆண்டு கழிந்தாலும்
கவிதைப்போல் புகழாய்
கண்ணே உன் முகம் நினைவிருக்கும்!
துணைதேடி வந்த நிலவு
தொலைந்துபோய் நின்றதே!
துணையாக யாரையோ
துணிச்சலுடன் பிடித்ததே!
பாதைகள் முடிக்கிறதே!
பயணங்கள் தொடர்கிறதே!
ஞாபகங்கள் மட்டும்
அணுயளவு அழியாமல்
என் இதயத்தில் படர்கிறதே!
முடிகின்ற பயணத்தில்
ஞாபகங்கள் மிதமிருக்கும்!
போகாத பயணத்தில்
ஆசைகளே மிதந்திருக்கும்!