சூரியனென்று தெரியாமல் சுற்றிவந்த கிரகம்
சூரியன் என்று தெரியாமல்
சுற்றி வந்தது ஒரு கிரகம். .அது சூரியனை
எரிகல் என்று நினைத்திருந்தது .
சற்று நெருங்கிப் பார்த்து
கொள்ளிவாய்ப் பிசாசு என்று
பயந்து போனது .
சுற்றாமல் விலகலாமா என்று நினைத்தது .
சுற்றினால் என்ன ?
விலகினால் என்ன ?
சூரியன் சூரியனாகவே
இருக்கிறது .