அவளது நினைவுகள்
பரந்த வானில்
தொலைந்த நட்சத்திரங்கள்
அவளது நினைவுகள் ...
தொட முடியாவிட்டாலும்
தொடர்ந்துகொண்டே இருக்கும்
அவளது நினைவுகள் ...
காலத்தாலும் கலைக்க முடியாத
கரு ,அவளது நினைவுகள் ...
எதிர் பார்க்காத இடத்திலும்
ஏமாற்றம் தரும்
அவளது நினைவுகள் ...
குடைக்குள்ளும் மழையாய்
அவளது நினைவுகள் ...
கூரையிலும் கோபுரமாய்
அவளது நினைவுகள் ...
அடியின் வேராய்
அவளது நினைவுகள் ...
ஆழத்தின் விழுதாய்
அவளது நினைவுகள் ...