என் தாயே
கதிரவன் இன்றி உயிர்கள்
தோன்ற முடியுமா?..
நீ இன்றி நான் பிறந்து
இருக்க முடியுமா? தாயே
தாயே உனது சுகம் புரியவில்லை
உன்னோடு இருந்த போது
உன் தாய்மடியை விட்டு விட்டு விலகிய
பின்பே புரிந்து கொண்டேன்
தாயே உன் அருமை
இறைவனின் கருணை உள்ளம் போல்
உன் மனது இருப்பதால் தானோ
எல்லா உயிர்களும் அடைக்கலம்
புகும் இருப்பிடமனாய்
சரியான வழியில் செல்ல
துடுப்பாக இருப்பவலும் நீ தானே
காயத்துக்கு மருந்தாகவும்
வருபவளும் நீ தானே
உன்னை போல சோகத்தை கரைக்கும்
கறைப்பானும் இல்லையே என் தாயே
உன்னை கவி வடிக்காமால் விட்டால்
எம் மனது முழுமை அடையுமா?...