சாரல் சிந்தும் காதல்

விண் பூக்கள் விடியல் வண்ணமாகும்
சிந்தும் சாரல் தாளம் போட்டு
ஆசை நெஞ்சில் ஆடும்

இடி மழை மின்னல் வந்தால் ஜன்னல் வழி பார்வை போகும்
நனைந்திட ஆசை வேகும் நனைந்தால் பாகம் எங்கும் பூக்கள் பூக்கும்

நீரை உண்டு தான் மண் ஏப்பம் கொள்ளுது
மண்வாசமானது மூக்கை இழுக்குது
குளிரால நடுக்கமா
மேகம் போர்வை போட்டு கொண்டு
தீ அனைத்து தூங்க செல்ல

காற்றிலே குளிர் காற்றிலே கொட்டும் கோடி முத்து தேன்களை
பூமியும் வாழத்தான் வானம் அள்ளி கொட்டுதோ

பட்டு பட்டு சொட்டு தண்ணி விட்டு விட்டு முத்தமிட்டு
தொட்டு தொட்டு ரசித்திட ஏங்கும் சின்னச் சிறு பூக்கள் நெஞ்சம்

நகரம் எங்கும் குளியல் போட்டு பரிசுத்தமானது
சொர்க்கம் தெரியுது மின்னல் திறக்குது கண்ணை பறிக்குது
உச்சி மீது வானிடிந்து தங்க துளி தூவுதே
அங்கம் எங்கும் சங்கமிக்கும் இன்ப பூமழை . . !

( வான் மேகம் பூப் பூவாய் தூவும் பாடல் மெட்டில் எழுதப்பட்ட வரிகள் )

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (11-Apr-16, 6:31 am)
பார்வை : 156

மேலே