நிழலென தொடரும் நானே

என்னுள் தொலைத்த உன்னை
எந்நாளும் சிரிப்புடன் காத்திட
உன்னில் தொலைத்த என்னை
என்னுள் தேடி ஏனோ வியக்கிறேன்?
உறக்கத்தின் முன்னும் பின்னும்
உலகம் மறந்து உறங்கும் போதும்
உள்ளிழுக்கும் காற்றில் உயிரே
உனையிழுத்து உயிர் வாழ்கிறேன்...!
எங்கிருந்தோ வந்தாய்
ஏதேதோ செய்தாலும்
எனக்கெனவே செய்தாய்...
எனதருகே இமைபோழுதும்
எனெக்கென வாழ்கிறாய்
எந்தாய் காட்டாத ஏகாந்த அன்பை
என்தாயே நீயேன் அள்ளி இரைத்தாய்...?
அறிந்தோ அறியாமலோ
ஆயிரம்முறை அழவைத்து
ஆழ வதைத்து உனைகொல்கிறேன்....!நீ
மழைநின்று வரும்வெயிலாய்
சிலநிமிடம் சுட்டாலும்-உன்
அன்பின் சுமைகூட
கருமேகமாய் கரைகிறாய்...
பூத்து குலுங்கும் புதுமலராய்
புன்னகைத்து எனை இயக்கினாய்...!
பூவே உன்னை பார்த்து
புன்னகை அதை பார்த்து
மதுஉறிஞ்சு குடித்து
மயக்கத்தில் மகிழ்ந்ததாலோ?
மலரே உந்தன்
மனக்கவலை உணரமறந்தேன்?
ஒளிதர உருகும் மெழுகாய்
இரவை பகலாக்கும் நிலவாய்
எனக்கென கொஞ்சும் மலரே-நீ
உதிர்வதை தடுத்திட -என்
உயிர்வதை நிறுத்திட
உதிரத்தால் நீரிடவா?
நிழலென தொடரும் நானே..
நீயுற்ற துன்பம் போதும் போதும்..
நெடுந்தூரம் சென்றாலும்
நீங்கிஎனை சென்றாலும்
சின்னஞ்சிறு குழந்தைபோல்
சிரித்துநீ வாழவேண்டும்
என்னவிலை என்றாலும்
என்னுயிரே போனாலும்
உதிராத மலராய்நீ
புன்னகையே பூக்கவேண்டும்
காகிதப்பூ போதும்இனி
கடவுளே கேட்டாலும்
நிழலென தொடரும் நானே..
நீயுற்ற துன்பம் போதும் போதும்..
செத்தே நான் போயிருந்தாலும்
சட்டென மீண்டேழுவேன்
கிறுக்கு தங்கமே என-நீ
விரும்பி அழைக்கும்போது
தூரம் ஒன்றும் செய்யாது
பாரம் ஒன்றும் கொள்ளாதே..
உலகை அளந்திட நீகிளம்பு
உன்பாதையில் கிடக்கும் புல்லை
உனைதொட்டும் தழுவும் காற்றை
அத்தனை பேரையும் நண்பனாக்கி
என்னால் இயன்றதை செய்கிறேன்
இதயமே உனக்காக
நிழலென தொடரும் நானே..
நீயுற்ற துன்பம் போதும் போதும்..
செத்தே நான் போயிருந்தாலும்
சட்டென மீண்டேழுவேன்
கிறுக்கு தங்கமே என-நீ
விரும்பி அழைக்கும்போது
தூரம் ஒன்றும் செய்யாது
பாரம் ஒன்றும் கொள்ளாதே..
நான்இருக்கும் இருட்டறைவிட்டு
உலகை அளந்திட நீகிளம்பு...!

எழுதியவர் : காசி. தங்கராசு (11-Apr-16, 3:35 am)
பார்வை : 106

மேலே