தொடர்பு எல்லைக்கு வெளியே

வறுமையும்,வளங்களும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
அறிவும்,நேர்மையும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
ஏழ்மையும்,உறவுகளும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
பணமும்,பண்பும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
அப்பாவிகளும்,மகிழ்ச்சியும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
தீயகுணங்களும்,நிம்மதியும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
ஆணவமும்.அன்பும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
பணிவும்,பதவியும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
அமைதியும்,ஆரவாரமும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
உண்மையும்,நியாயங்களும்
தொடர்பு எல்லைக்கு வெளியே
நன்மை,தீமை
உண்மை,பொய்
எதுவும் ஒன்றையொன்று
சந்திக்க போவதுமில்லை என்றுமே
தொடர்பு எல்லைக்கு வெளியே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (11-Apr-16, 5:01 pm)
பார்வை : 90

மேலே