பிள்ளையார் சுழி எதற்காகப் போடுகிறோம் தெரியுமா

ஒரு செயலை தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டே ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆன்மீக விதி.

நிறைய பேருக்கு பிள்ளையார் சுழி எதற்காக போடுகிறோம் என்று தெரியாது.
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம்.

அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம்.

பிள்ளையார் சுழி என்பது
அகரம் ( அ ),
உகரம் ( உ ),
மகரம் ( ம )
ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ’ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம்.
அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்;
கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (12-Apr-16, 9:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 88

சிறந்த கட்டுரைகள்

மேலே