பொய்யும் மெய்யும் --முஹம்மத் ஸர்பான்

அகிலம் பாவிகள் இல்லம்
மகிமை பேசும் பொய்கள்
காகிதக் கப்பல் மிதந்து
வெள்ளம் கடக்கும் மெய்கள்
***

கள்ளி விதையினைப் போல்
முட்கள் நிறைந்தது பொய்கள்
துளசி மூலிகை போல
நெஞ்சை ஆற்றிடும் மெய்கள்
***

தாரில் உள்ளது கருமை
மனதின் சாக்கடை பொய்கள்
ஆழியில் மிதக்கும் தோணி
அசைந்திடும் திரைகள் மெய்கள்
***

கணிதம் என்ற குறுஞ்சொல்லில்
எண்ணி முடிப்பவை பொய்கள்
நிரந்தர வாழ்க்கை மண்டபத்தில்
அள்ளி சுமப்பவை மெய்கள்
***

புண்ணியம் கோடிகள் சுமக்கும்
பாடையின் பாரம் மெய்கள்
பாவ நெஞ்சத்தின் சாவி
மண்ணறை நெருக்கும் பொய்கள்
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-Apr-16, 11:13 am)
பார்வை : 108

மேலே