நீ எனக்கு பிடித்த பெண்ணடி
என் பாட்டினை நீயாவது கேளடி
உனைச் சுற்றிடும் நானொரு கோளடி
உன் பெயர்மட்டும் சொல்லுமென் தாளடி
உனைக் காணாதவரை கண்ணீர்விடா ஆளடி
என் பெயரை ஒருமுறையேனும் சொல்லடி
நான் எதிர்பார்த்து இருப்பதுன் கண்ணடி
ஆனால் எனக்கு கிடைப்பதென்னவோ கல்லடி
எனை வெறுத்தாலும் நீஎனக்குபிடித்த பெண்ணடி
உன் கண்ணாலே எனைப் பாரடி
என் கனவிலே வந்தோர்முறை ஆடடி
என் நிழலாகி என்னுடனே சேரடி
என் காதல்தாகம் உன்சம்மதத்தால் தீரடி
என் இதயத்திற்குள் நீஆழப்பதிந்த வேரடி
ஒரு முறையேனும் எனக்காயவது மாறடி
உனை விட்டால் என்குறைதீர்ப்பார் யாரடி
நல்ல பதிலை இக்கணமேனும் கூறடி
என் தெருவில் உன் காலடி
எவரேனும் எனக்கு சொல்வாரெனில் இந்நொடி
எனக்கு முளைத்துவிடும் காதல் ரெக்கையடி
அது உன்வருகை எனக்குபோட்ட பிச்சையடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
