அந்திப் பொழுதுகளின் சுந்தரக் கனவுகள்
அந்திப் பொழுதுகளில்
அவள் தந்த
சுந்தரக் கனவுகள்
நித்தம் நெஞ்சை வாட்டுதடி !
கைகோர்த்து நடந்த சாயந்திரங்களும்
சாயந்திர சந்த்ரோதய பிம்பங்களும்
நேச அலைகளாய் நெஞ்சில் மோதுதடி !
வானில் உலவும் வசந்த நிலவுகளே
காலைத் தழுவும் சௌந்தர்ய நதி அலைகளே
நந்தவனத்து பூந் தென்றல் தோழியரே
வருகிறேன் என்று சொல்லிச் சென்றவள்
இன்னும் வரவில்லை
ஏன் என்று கேட்டு வந்து சொல்லுங்களேன் !
சுந்தரப் பொழுதுகளின் அந்தி நினைவுகளை
நெஞ்சில் அவள் விட்டுச் சென்ற நிலாச் சுவடுகளின்
பிரேம சந்தேசத்தை எனக்காக
ஒரே ஒருமுறை சொல்லி வாருங்களேன் !
----கவின் சாரலன்