ஏன் தமிழன் தமிழனை பின்தள்ள வேண்டும் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்

ஒரு அடர்ந்தக் காட்டில் மரங்கள் ஏராளம் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்
ஒரு வகை . மாமரம், வேப்பமரம் , பனை மரம், மூங்கில் மரம், கருவேல மரம், சந்தனமரம், ஒலிவ மரம், இப்படி பல வகை மரங்கள் ஒன்றிணைந்து ஒரு காட்டில் இருந்தன. மரங்களுக்குள் ஒரு போட்டி
நம்மில் சிறந்தவர் யார்? என்பதே அந்தப் போட்டி.
முதலில் போட்டியிட்ட மூங்கில் உயரத்தில் சிறந்ததாயினும் இனத்தில் புல்லினமே என்பதை அறிந்து ஒதுங்கியது. பின்பு போட்டியிட்ட பனைமரம் உயரமும் உண்டு .கனிகளும் உண்டு. சற்று சாய்ந்தால் கை பிடிக்க கிளைகள் இல்லை என எண்ணி ஒதுங்கியது. அடுத்து போட்டியிட்ட வேப்பமரம் தன்னுள் அடங்கிய அனைத்தும் பயனுள்ளது என்றாலும், சுவையற்றது என்பதை எண்ணி ஒதுங்கியது. அடுத்து வலியது என தனை எண்ணி வந்த கருவேல மரம் முட்களும், கிளைகளும் தவிர நற்கனிகள் நம்மிடம் இல்லை என்பதை அறிந்து ஒதுங்கியது. பின்வந்த மாமரம் காய்களையும், கனிகளையும் தவிர்த்து பிறவற்றால் ஏது பயன் என எண்ணி ஒதுங்கியது.
பின்வந்த சந்தன மரம் மதிப்பில் சிறந்தது தான் இலைகளும், காய்களும் இருந்தும் பயனில்லையே என எண்ணி ஒதுங்கியது. இப்படி ஒவ்வொரு மரங்களும் தன் இயல்பை அறிந்து
நாம் அனைவரும் ஒவ்வொரு வகையில் பலவீனமானவர்களே என்பதை அறிந்து பின் ஒன்றுபட்டு ஒரே காட்டில் ஒன்றாக வாழ்ந்ததாம் ஒன்றின் நன்மைகளை மற்றொன்று பகிர்ந்து
மகிழ்வுடன்...............................
ஆனால், மதியற்ற மனிதன் தன் மதம் மட்டும் போதும், தன் சாதி மட்டும்போதும், தன் இனம் மட்டும் போதும், தன் குலம் மட்டும் போதும் என சுயநல வாதிகளாய் மாறி பிறனைப் பின் தள்ளி தான் மட்டும் வாழும் போது இச் சமூகத்தில் இருந்து தூக்கி எறியப் படுகிறான்.
அவன் தமிழன் என்றாலும் சரி, தன் மானச் சிங்கம் என்றாலும் சரி.

தன்னலமுடன் வாழ்ந்தால் தடுமாறிப் போவாய் !!
பொது நலமுடன் வாழ்ந்தால் பொன் போலாவாய் !!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (13-Apr-16, 9:15 am)
பார்வை : 200

மேலே