ஆத்திகர் நாத்திகர்
பற்றினை விடு பாசத்தை விடு
பாரம் ஏன் ? ஆண்டவன் தேன்
ஆசை கொள் அவனிடம் மட்டும்
அடித்து சொன்னார் ஆத்திகர்
அவனை விடு ! ஆண்டவனே இல்லையே!
ஆதாரம் எங்கே ?அறிவு கொண்டு அலசு !
ஆசைப்படு அத்தனையும்! அறிவிலியே !
அனலாய் ஆணித்தரமாய் நாத்திகர்
விடிய விடிய வாக்கு வாதம்
விடை தான் தெரியவில்லை
வந்தது ஐயம் சிறந்தது எது?
விடிந்த பின் நடந்ததோ இது!
பரமனை விட்டு விட்டார் ஆத்திகர் !
பற்றினார் டாஸ்மாக் பார்தனை!
பற்றினை விட்டு விட்டார் நாத்திகர் !
பற்றினார் பாண்டவ தூதனை !
மறுநாளும் தொடர்ந்தது வாதம்
மறுபடியும் மாறியது மனங்கள்
தொடர் கதை இது தொக்கியே நிற்கும்
துவக்கமும் இல்லை தொய்வும் இல்லை