காமராஜர் - கல்வித் தந்தை

" கல்வித் தந்தை காமராஜர்
பள்ளிக் குழந்தைகளுக்காக
இலவச மதிய உணவுத்
திட்டத்தை கொண்டுவந்தார் "
தங்கள் குழந்தைகளின்
வாழ்கையை சி.பி.எஸ்.சி .
பள்ளிகளில் அடகுவைத்து
திரியும் பெற்றோர்களுக்கு
இது வெறும்
பொது அறிவுச் செய்தி


உப்பளத்தில் கருவாடாகி
சாக்கடைகளின் மீத்தேனோடு
ஆக்சிஜனை சுவாசித்து ,
செங்கற் சூலையில்
செங்கற் கற்களோடு
பசியை எரித்து ,
போராட்டங்களுக்கு நடுவே
வாழும் பெற்றோர்களுக்கு
இது தேவ தூதன்
கனவில் வந்துச்
சொல்லிய நற்செய்தி

காமராஜர் தந்தது
பசித்த வயிற்றுக்கு
மதிய உணவும் ,
கல்லாத மக்களுக்கு
கல்வியும் மட்டுமல்ல

காமராஜர் தந்தது
பாமர சமூகத்திற்கான
மரியாதை !
ஊட்டச் சத்தற்ற
சமூகத்திற்கான
உயிர்!
சிறைப்பட்ட சமூகத்திற்கான
சிந்தணை!
அடிமை சமூகத்திற்கான
அடையாளம் !
ஊமை சமூகத்திற்கான
உரிமை !

கொடுமை என்னவெனில் ,
இத்தனையும் பெற்றுத்தந்தவரை
இன்னும் சிலர்
தியாகங்களால் அல்ல
ஜாதியால் அடையாளப் படுத்துகின்றனர் !

கல்வி ????



(காமராஜர் போட்டிக்காக எழுதிய கவிதை . சிறு பிரச்சணை காரணமாக சென்ற வாரம் சமர்ப்பிக்க முடியவில்லை) .

எழுதியவர் : அனுசுயா (13-Apr-16, 10:20 am)
பார்வை : 2724

மேலே