அவளே எங்கள் ‘பிளாக்கி’

அவள் ஒரு கருப்பி!
ஆனாலும் மிகவும் சுறுசுறுப்பு,
தேர்ந்தவள் போல நாட்டியமாடுவாள்,
அவளுக்கு இணை யாருமில்லை – ஏனெனில்
அவள் மிகவும் சுறுசுறுப்பு!

அவள் உணவுக்காக பறப்பாள்!
எலி வேட்டையாடும் பூனை போல,
எலும்புக்கறி என்றால் சிறுபிள்ளை போல
அடம் பிடிப்பாள், தாவிக் குதூகலிப்பாள்,
அவள் மிகவும் சுறுசுறுப்பு!

நல்லவள் என்று பேரெடுக்க
நாளும் ஓடுவாள் – குரைப்பாள்!
அவள் எங்கள் வீட்டுச் செல்லம்,
அவளே எங்கள் ‘பிளாக்கி’!
அவள் மிகவும் சுறுசுறுப்பு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-16, 10:02 am)
பார்வை : 139

மேலே