ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக ஆசைப்படக்கூடாதா ஏன் ஜாதி சாயம் பூசுகிறார்கள்
தமிழனைத் தமிழன்
உயர்த்தவும் ஏத்தவும்
உச்சியில் அமர்த்தி
அழகு பார்க்கவும்
என்றுமே தவறியதில்லை !!
எனினும் சிலர்
ஏற்றிவிட்ட
ஏணிப் படிகளை
மறந்து மாற்றான்
தோட்டத்து
மல்லிகையாகும் போது
மனமுடைந்து தமிழன்
சில நேரம் தமிழனை
வெறுக்கிறான் !!
ஏணியில் ஏறும் போது
தமிழனாக ஏறும் சிலர்
மேல்நோக்கி சென்றப்
பின் ஜாதியை சொந்தமாக்கி
சாக்கடையில் விழுகின்றபோது
தமிழன் சில நேரம் தமிழனை
வெறுக்கிறான் !!
தமிழன் என்றுமே
தமிழன் தான்
அதனால் தான் -அன்று
பல நல்ல தலைவர்களை
அரியணையில் ஏற்றி
அழகு பார்த்தான் !!
காமராசர்,அண்ணா,
பெரியார் , அன்புத் தலைவர்
அப்துல் கலாம் போன்ற
தமிழர்களை எவ்வித
ஜாதி சாயமும்
பூசாமல் தலைவர்களாக்கி
அழகு பார்த்தனர்
நம் தமிழர்கள் !!
இன்று ஏன் தமிழன்
தமிழனை உயர்த்துவது
இல்லை என்றால்
தமிழன் தமிழனாக
நடக்காமல் தலைக்கணம்
உள்ளவனாக ,
தன்னை மறந்தவனாக
தன் சாதிக்கும் ,
தன் குடும்பத்திற்கு
மாத்திரம்
உழைப்பவனாக
தனித்தவனும்
ஆஸ்தி ஆடம்பரம்
சொத்து பத்து
காரு பங்களா என
வசதி வாழ்க்கையை
மட்டும் விரும்பி
வாழ்பவனாக
இருப்பதால் அவனே
மக்களின் மனதை
விட்டு மண் குடிசைக்கு
போகிறான் !
மாட மாளிகையை
விரும்புகிறவனால்
மக்களின் மனதில்
குடியேற முடியாது !!
சாதியை விரும்புகிறவனால்
ஜனங்களின் அன்பைப்
பெற முடியாது!!
சாதிகள் கடந்தும், மதங்கள்
கடந்தும், பேதங்கள் கடந்தும்
ஒன்றி வாழ்வது
நம் தமிழர்கள் மட்டுமே!!
வாழ்த்துவதும் வாழ
வைப்பதுமே தமிழர்கள் !!!
வீழ்வதும் தாழ்வதும்
பூசுவதும் தூற்றுவதும்
சிலரது பேராசைகளும்
அறிவீனங்களுமே!!!!!
தமிழனோடு தமிழனாக
வாழ்பவனை தமிழகம்
கைதூக்கி விட ஒருபோதும்
தயங்குவதில்லை !!!
தமிழனை ஜாதி,மதம்
இனம் இவற்றின்
பெயரால் பிரிப்பவர்களை
தூக்கி எறியவும்
தயங்குவதில்லை !!!!!
ஜாதி சாயம் பூசுவது
தமிழன் அல்ல
அவன் ஜாதியே !!
அரியணையை மறுப்பது
தமிழன் அல்ல
அவன் குறுகிய
எண்ணமே !!!!!!!!!!!