நம்பிக்கை
நம்பிக்கை என்ற சிறகுகள் உடைய ஒன்று
.....ஆன்மாவில் அமர்ந்து கொள்கிறது,
வார்த்தைகளின்றிப் பண் இசைக்கிறது,
.....ஒரு பொழுதும் நிறுத்துவதில்லை!
அது இனிமையாக
......ஊளையிடும் காற்றினிலும் - கேட்கிறது
அதனால் புயலும் புண்பட்டிருக்கும்,
பலரையும் இதமாக வைத்திருந்த
.....பாடும் சிறு பறவையையும் நாணச் செய்யும்!
நான் அதை மிகக்குளிர் நிலத்திலும்
....கொந்தளிக்கும் கடலிலும் கேட்டிருக்கிறேன்,
இருப்பினும், ஒருபோதும் கேட்டதில்லை,
.....அண்டவெளிகளில், அது எனது
மென்மையான நெஞ்சத்தைக் கேட்டது.
Ref: Hope Is The Thing With Feathers - Poem by Emily Dickinson