சித்திரைப் பெண்ணே வாராய்

மாதங்களின் தலைமகளே
மார்கழியாள் உடன்பிறப்பே
மாவிளக்கு ஏற்றிவைத்து
மாலைசூட்டி வரவேற்போம்
மாலவனின் அருளாலே
மாதவத்தின் பயனாலே
மாணிக்க வீணையேந்தி
மதுரகானம் மீட்டிடவே
மாண்புடனே வந்திடுவாய்
மகிமைபல புரிந்திடுவாய்
மாசுகளை மாய்த்திடுவாய்
மாறுபாடு அகற்றிடுவாய் ....!!!
அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !