முப்பொழுதும் உன் கற்பனைகள்

எனது பாதியே
விழி தேடிடுதே
உனது பாதையே ...

விழித்திடவே
இமை திறந்தேன்
விழித்தடம்
நீ நின்றிடவே
நான்
மெய் மறந்தேன்..

இறவாத
இரவுகளை எதிர்பார்க்கிறேன்..
உன்னை எதிரில் பார்க்கும்
கனவுகள்
முடியாதிருக்க...

உன் இதயம்
துடிக்காமல்
என் இமைகள்
திறக்காதே
உயிரே..

எனது பாதைகள்
தொடங்கிடுமே
உன் கைகள் கோர்த்து..
எனது பயணம்
முடிந்திடுமே
உனது
பாதை பார்த்து...

உன் உயிர் வருடிய
காற்று
என்
நாசி தீண்டும் வேளை
அதுமுதல்
உணராத
ஸ்பரிசம் உணர்கிறதே
என் உயிரணுக்கள்...
அந்த நொடியிலே
முதன்முதலாக
முழுவதுமாக...

உனது காலை
விடிய வேண்டும்
எனது விழிகளில் ..
எனது இரவுகள்
தொடர வேண்டும்
உனது அருகினில்...

என் நாள்
உனதாக..
எந்நாளும்
எனை உனதாக்கவே
காத்திருக்கிறேன் .
முப்பொழுதும் உன்
கற்பனையில்
உனக்கென நான்....

எழுதியவர் : amoga (15-Apr-16, 9:25 pm)
பார்வை : 795

மேலே