முடியட்டும் விடியட்டும்

முடியட்டும், விடியட்டும்!
###
என்னங்க அய்யா, நம்ம கட்சியை எதுத்து தேர்தல நிக்கற ஒரு பெரிய கட்சி அவுங்க தொலைக் காட்சி வெளம்பரத்தல பயன்படுத்தற முடியட்டும் விடியட்டும்ங்கற ரண்டு சொற்கள நீங்களும் சொல்லறீங்க?
####
டேய் மடப்பயலே. அடிமடடத் தொண்டா. மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியன் நிறுவனத் தலைவரும் குடிகாரன்பேட்டைத் தொகுதியில் நமது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் இந்த மொடாக்குடி மாடசாமி ஒண்ணு சொன்னா அதுக்கு ஒம்பது அர்த்தம் இருக்கும்டா.
####
தமிழ் நாட்டிலே இருக்கற அத்தன குடிகாரத் தோழர்கள் மற்றும் மது விற்பனையாளர்கள், அவுங்க குடும்ப உறுப்பினர்கள், மதுக் கடைகளின் அருகில் மதுப் பிரியர்கள் விரும்பும் தின் பண்டங்களை விற்பவர்கள், அவுங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் நம்ம கட்சியின் மதுபாட்டில் சின்னத்துக்குத் தான் வாக்களிப்பாங்க. அதனால 234 தொகுதிங்கள்ல நாம தான் ஜெயிக்கப் போறோம். அத மனசுல நெனச்சுத் தான் முடியட்டும்னு சொன்னேன. அதாவது, தேர்தல் நடைபெற்று முடியட்டும்ங்கற அர்தத்திலே.
#####
விடியட்டும்னு எதுக்கய்யா சொன்னீங்க?
#####
விடியட்டும்னா தேர்தல் முடிவு வெளியாகட்டும்னு அர்த்தம்டா. தேர்தல் முடிவு வெளியானதுக்கப்பறந்தாண்டா நாம பதவி ஏற்கற விழாவ நடத்த முடியும்.
###%#
நீங்க சொல்லறது சரிதாங்கய்யா. முடியட்டும், விடியட்டும்.!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குடியினால விதவையான இளம் பெண்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகமாக உள்ளதாம். படமும் தகவலும் நன்றி :pmptnwordpresscom

எழுதியவர் : மலர் (17-Apr-16, 3:06 pm)
பார்வை : 329

மேலே