சிறு குருவியாக
நந்தவனமாய்
இருக்கப்
பட்டாம் பூச்சியாய்
சுற்றிக் கொண்டிருந்தாய்
பாலை வனமாய்
மாறிக் கொள்கிறேன்
ஒட்டகமாய் அடிக்கடி
கடந்து
போகிறாய் ..
சாரலாய்
நீ வரக்கண்டு
சாளரங்களைச்
சாத்திக் கொள்கிறேன்
கூரை கிழித்து
கொட்டிக்
கொண்டிருக்கிறாய்
அடை மழையாக..
தப்பிச் செல்ல
வழியில்லாது
மறுபடியும்
அகப்படுக்
கொள்கிறேன்
நீ சிந்திச் சென்ற
அன்புத்
தானியங்களை
கொத்தித் திரிந்தவாறு
உன் மனவெளியெங்கும்
சிறகடித்துச் செல்லும்
சிறு குருவியாக..