தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 30 = 80
“சந்தனமல்லி கட்டுற சாந்தி - வா!
சந்தைக்குப்போயி வாங்கலாம் பூந்தி
உன் பூப்போட்ட தாவணியில் ஏந்தி
ஊர் ஏரிக்கரையில் தின்னலாம் குந்தி”
“பஞ்சத்துல அடிப்பட்ட மாமா - நீ
கஞ்சிக்கே வழியில்லாத டூமா
உனக்கு ஏன் பொல்லாத ஆசை
நீ மாத்திக்கோ உன்னோட மனசை ”
பல்லிப்போல தொங்குது மனசு
நான் என்ன செய்வேன் சரசு
உன்னைப்போல ஒரு தங்கம்
கிடைச்சா தீரும் என்னோட பஞ்சம்
சுத்த அண்ணக்காவடி நீ என்று
என் ஆத்தா திட்டுவா போயிடு
உன்னை நான் அடைஞ்சி
ஏன் எடுக்கனும் திருவோடு
பிச்சைக்கார பெருமாளுக்கு காதல் கூடாதா
அவனை மனுஷனா மதிக்காமல் இன்ஷல் செய்வதா
எச்சைசோறு தின்னாலும் அவன் மானமுள்ளவன்
பொல்லாத சமூகமே இது உனக்குப் புரியாதா
தத்துவம் கேட்க நல்லாத்தான் இருக்கு
அதை புத்தகமா எழுதி பரண்மேல போடு
பணக்கட்டு இருந்தா எடுத்துக்காட்டு
இப்பவே என்னைப்போல பத்துக்கிளி
உன்னைவந்து சுத்தும் பாரு !
குமரிப்பெண்ணே உனக்கு
பணக்காரன்தான் வேணுமா
அவன் அறுபது வயது கிழவனானாலும்
உன் மனம் கட்டிக்க விரும்புமா ?
ஆம் அதெப்படி கண்ணா
நான் அழகான பெண்தான்
இருபது வயதா இருந்தாதான்
இறுதிவரை சுகம் பெறலாம்
அந்த வகையில் நானுனக்கு
ஈடு கொடுக்கும் காளைதான்
என் வசதியை பெரிதாய் கருதாமல்
சூடு எனக்கு மண மாலைதான் !
எனக்கும் உன்மேல விருப்பம்தான்
ஆனாலும் அதிலொரு வருத்தம்தான்
என் வருத்தத்தை விரைவில் போக்க
உன் வறுமைப் பேயை விரட்டியடி..!