சொன்னீங்களே செஞ்சீங்களா
சுரேஷ் உங்கள மூணு மாசமா பாக்காம தவிச்சிட்டு இருக்கறேன். உங்ககூட செல்பேசில தொடர்பு கொள்ளவும் முடில. வேற சிம் கார்டு போட்டுடீங்களா. உங்க வீட்டு முகவரியும் நீங்க குடியிருக்கும் பகுதியும் தெரிஞ்சுக்காம உங்கள நா மூணு வருசமா காதலிச்சேன். உங்க புகைப்படங்கூட எங்கிட்ட. இப்ப இந்தக் கோயில்ல பாத்ததுக்கப்பறந்தான் எனக்கு நா மறுபிறவி எடுத்த மாதிரி ரொம்ப சந்தோசமா இருக்குது. ஆமா யாரோ ஒரு கல்யாணம் ஆன பொண்ண உங்ககூட அழைச்சிட்டு வந்திருக்கீங்க. இவ யாரு உங்க தங்கச்சியா.@@@
அடியே முட்டாப் புள்ள கனகா, என்னொட உண்மையான பேரு சுரேஷ் இல்லடி. இவ என்னோட அத்த பொண்ணு இவள நாங் கல்யாணம் பண்ணி மூணு மாசம் ஆகுதடி.
@@@@
அய்யோ, அய்யோ. உங்களோட உயிரே நீ தான்னு அடிக்கடி சொல்லுவீங்களே. என்ன சத்தியமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கொருக்குப் பேட்டை மாரியம்மன் கோயில்ல கற்பூரத்தை அணச்சு சத்தியம் பண்ணினீங்களே. என்ன கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?
@@@@@
நான் இதுவரை போலீசில மாட்டாத ஒரு கோடீஸ்வர ரவுடியோட மகன்டீ. எங்கப்பன் வழிப்பறிக் கொள்ளையடிச்சு கோடி கோடியா சம்பாதிச்சு வச்சிருக்கான். என்னோட அத்தை குடும்பமும் எங்க குடும்பத்தப் போல ஒரு ரவுடிக் குடும்பம். நா பொழுது போக்குக்காக பல அழகான பொண்ணுங்கள காதலிச்சேன். அவுங்க யாருகிட்டயும் என்னோட புகைப்படமும் கெடையாது அவுங்களுக்கு என்னோட முகவரியோ நாங் குடியிருக்கும் பகுதி பற்றிய வெவரோ தெரியாது. நீ என்னோட எத்தனையாவது காதலியா இருந்தங்கற எண்ணிக்கை கூட எனக்குத் தெரியாது. ஆனா உங்க வீடு எங்க இருக்குது உங்க குடும்ப வெவரம் எல்லாம் எனக்குத் தெரியும். இனிமே என்ன எங்காவது பாத்தா சொன்னீங்களே செஞ்சீங்ளான்னு கேட்டுட்டு நீ வந்த என்னோட அத்தை மக என்னோட அருமை மனைவியே உன்னத் தூக்கிப் போட்டு மிதிச்சு சட்னியாக்கிடுவா. நீ உங்க வீடு போய்ச் சேரறதுக்குள்ள உங்க குடும்பத்தச் சேந்வங்க எல்லாம் காணாம போயிடுவாங்க. சாக்கிரதை. இந்தத் தடவ உனன மன்னிச்சு உயிரோட விடறேன். ஓடிப் போய் பொழச்சுக்க. உன்னக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணிச் சொன்னேண்டி. காதலிக்கற பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கற பழக்கம் எங்க பரம்பரைக்கே கெடையாதடி. போடீ போ.
@@@
தூ.... நாசமாப் போடா நாயே.
@@@
அடி போடீ உஞ் சாபமெல்லாம் என்ன ஒண்ணுஞ் செய்யாது. இன்னும் ஒரு நிமிசம் நீ இங்க இருந்தா என்னோட ரவுடி மனைவி உன்னச் சட்னியாக்கிடுவா. போ, போய்ப் உயிரக் காப்பாத்திக்க.
*******************************************************************************************************************
படம்: நன்றி :: vanniexpressnewscom