அட தேர்தலா நடக்குது - சந்தோஷ்

தேர்தலா நடக்குது இங்க..!
அட.. சாமானியனே..
தமிழ்நாட்டுல தேர்தல்லா நடக்குது..?

உன் தலை...
என் தலை
நம்ம தலை
எல்லா தலையையும்
கோடி கோடியா
அடமானம் வச்சி
வியாபாரம் நடக்குது..!

தொகுதி பங்கீடுனுன்னு சொல்வாங்க
குப்பனே....
அது தொகுதி பங்கீடு இல்ல
தொகுதி பங்கீடு இல்ல..
கொள்ளை நடத்த
இடத்த பங்குப்போடும்
கொள்ளைப் பங்கீடு
சுப்பனே..!

நீ ஓட்டுப்போட
குவார்ட்டர் கொடுப்பானுங்க..
நீ தண்ணி அடிப்ப..
அவன் கொள்ளைய அடிப்பான்..!

உன்கிட்ட இருக்கிற ஒட்டு
அது அவனுக்கு சொத்து சேக்கிற
துருப்புச் சீட்டு.. குப்பா
துருப்புச் சீட்டு.. !

நல்ல ஆளு எங்கன்னு நீ கேளு
நல்ல அரசியல் எங்கன்னு நீ கேளு
உன்னோட அரிசில
எவனவன் பேரு எதுக்குன்னு நீ கேளு..

உன்னோட வாக்கு கோவணத்துல
பொறுக்கியவன்
நிர்வாணம் மறைப்பது ஏன்னு கேளு.
கேள்வி கேளு.

வீட்டுக்கு வரும் ஒவ்வொரு
வேட்பாளன் ஒவ்வொருவனையும்
கேள்வி கேளு...

செய்வேன்னு அவன் சொன்னா.
இதுவரைக்கு என்ன செஞ்சேன்னு கேளு..

அம்மா தாய்மாரேன்னு சொன்னா.
அனாதைப் பயலா நீன்னு கேளு..

நிக்க வச்சி கேள்வி கேளு
நிக்க தகுதியென்ன இருக்குன்னு கேள்வி கேளு..

தப்பான ஆளுன்னா
செருபால நீ அடிக்க வேணாம்..
ஓட்டால நீ அடி..
அடிக்கிற அடி.....
நீ அடிக்கிற அடியில
நிமிரும் பாரு
ஜனநாயகம் குப்பா
நிமிரும் பாரு
நம்ம ஜனநாயகம்...!

**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (18-Apr-16, 4:28 pm)
பார்வை : 75

மேலே