பசுமை உலகம்
கடல் பரந்த
தீவில் மனம் திறந்து
எழுதுகிறோன் பசுமையின் உலகம்
பற்றி
உயிர்களை தாலாட்டும்
உணர்வுகளின் கீறலாய் உள்ளது இந்த பசுமையின்
அழகு
திமிக்கிடும் அளவு
திசை எங்கும்
பசுமையின் தூறல்
வேகமாய் பயணிக்கையில்
சேகங்களும் ராகங்களாய்
மாறுகின்ற
இந்தஅழகை இரசித்த போது
விசித்திரமான விண்பூக்களாய்
இம் மண்ணின்
பூக்கள் மலர்கின்றன
மனதுக்குள் மலர்கின்றன
அகிலங்களின்
அழகு என்
விழிகளில் நுழைந்து
இன்பமான உலகில்
துன்பமான பல நினைவுகள்
நிறைந்து உள்ளது
இந்த பசுமையின் அழகு
கண்டதும் துண்டங்களாய்
மறைந்துவிட்டது
இன்று
பொத்துவில் அஜ்மல்கான்