தேனீக்களுக்கு தினம் மே தினம்

பூப் பூவாய் தேடி அலைந்து
தேன் சேர்த்து தேன் கூடமைக்கும்
தொழிலாளித் தேனீக்களுக்கு
தினம் மே தினம் !

கூட்டைக் கசக்கிப் பிழிந்து
உறிஞ்சி தேனைக் குடிக்கும் மனிதனுக்கு
முதலாளித்துவ ஆதிக்க மனம் !

புரட்சி அறியா
பூக்களுக்கும் தேனீக்களுக்கும்
போராடத் தெரியாது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-16, 8:03 pm)
பார்வை : 182

மேலே