தினம் ஒரு தாவரம்

எம் வேர்களில் சிறிது
கண்ணீரை ஏனும்
தானம் செய்யுங்கள்
நான் வளர்கையில்
வாழ்ந்திடும் மனிதம்
செழித்திடும் புவி
தகிக்கும் வெயிலின்
கக்கும் அனலை
அமிழ்த்தும்
பனிமழையாய்
உயிரோட்டமாய்
உங்கள் வாழ்க்கையின்
ஒவ்வோர் நினைவிலும்
ஓரங்கமாய் நிலைபெற்றிட
தினம் ஒரு தாவரத்தை
உயிர்ப்பித்திடுங்கள்
பூமித்தாய் எப்போதும்
தாயாகவே பிள்ளைகளுடன்
பயணம் தொடர்வாள்.....

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (22-Apr-16, 6:53 pm)
பார்வை : 348

மேலே