கிணறு காணோம்

கயிறை இழுத்து நீரிறைக்க
கிணறு இருந்தது அன்றைக்கு!
கயிறு இருக்கு கிணறுமில்லை!
நீருமில்லை இன்றைக்கு!

கிணற்றுக்கு பொட்டும் வைச்சு
பூவும் வைச்சு வணங்கினாங்க
அன்றைக்கு!

எங்களுக்கேஸ்டிக்கர் பொட்டும்,
பிளாஸ்டிக்கு பூவும் உனக்தெற்கு?
பொட்டும் ….பூவும்கேள்வி கேட்க!
கோவிச்சிகிட்டு காணாமத்தான்
போச்சு கிணறு!

இங்கிருந்த கிணத்தைக் காணோம்!
கண்டுபிடிங்கன்னு மனுகொடுக்க
காவல் நிலையம் போனா!
காவல் நிலையமே காணாததால்
தலைமைக் காவலர் விளக்கமளிக்க
தலைமைச் செயலகம் போய் இருக்காராம்!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (22-Apr-16, 6:08 pm)
பார்வை : 163

மேலே