இயற்கையை நேசித்திடு
புன்னகையற்ற பெண்ணின் முகமாய்
பூக்களில்லா சோலைகள்....
கண்ணீர் வற்றியக் கண்களாய்
பாலைவன ஆற்றுப்படுக்கை....
வார்த்தையின்றி மௌனமான உதடுகளாய்
வேரறுத்த மரங்கள்....
பூமித் தாயை மதியாது போனாய்
அவள் கோபத்தில் எரிந்து வதைகிறாய்!!!
இரக்கமின்றி அவள் உடலை சிதைத்தாய்
அவள் கண்ணீரில் வாழ்விழந்து மிதந்தாய்!!!
மண்ணைக் களவாடி உன் புத்திரனுக்கு
நரகத்தை உருவாக்கிறாய்....
நச்சுகளை வீசியெறிந்து இரத்தத்தின் இரத்தத்திற்கு
பல்நோய்களை பரிசளிக்கிறாய்....
கால சக்கரத்தின் மாற்றந்தனை அறிய
ஆறாவது அறிவு என்றொன்று
உள்ளதடா மூடனே!!
உனை பெற்றத் தாயினை மதிக்கும்
மனதோடு புவி அன்னையை
நேசித்துப்பார்!!!
அவள் மனமுவந்து அள்ளித் தெளிக்கும்
வாழ்க்கையோடு பிணையும் சுகங்களை
சுவாசித்துப்பார்!!!
----- வாழ்வென்றும் இனிக்கும்..........