மனசாட்சி

நமக்குள் இருக்கும்
நமக்காக இருக்கும்
நம்மை வழிநடத்தும்
நம் மனசாட்சி

நாளும் பொழுதும்
விழித்து இருக்கும்
நல்வழி நடக்க‌
களித்து இருக்கும்

விரோதம் நினைக்க‌
கொட்டிப் போகும்
மதிக்கா விட்டால்
எட்டிப் போகும்

கண்ணுக்கு தெரியாது
பேசவும் வராது
முன்னுக்கு வரவே
இதன்படி நடப்போம்

இதனையும் கொல்லும்
மனிதர்கள் பலபேர்
இறுதியில் ஒருநாள்
இதன்தாள் பணிவர்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:38 am)
Tanglish : manasaatchi
பார்வை : 656

மேலே