எது குற்றம்

இன்றைய தேதியில் மாட்டாதவரை எல்லோரும் யோக்கியன்
அவனுக்கு உலகும் சூட்டும் பட்டப்பெயர் சாணக்கியன்
காசுள்ளவன் மட்டுமே ஆக முடியும் தலைவன்
காசில்லாதவன் பேச்சைக்கூட கேட்டிட‌ ஒரு நாதியில்லை

எங்கும் பணம் எதிலும் பணம்
பணத்தால் மனம் என்ற ஒன்று செத்துப்போச்சு
கம்பிகளுக்கு பின் இருக்கவேண்டியவ்னெல்லாம் எம்பியாம் எம்எல்ஏவாம்
ஊழல் பெருச்சாளிகளுக்கு சட்டமும் நீதியுமே காவலாயிருக்கு

அரசாங்க அலுவலகத்தில் பணம் ஆடுது பரமபதம்
பணம் கொட்டிட குறுக்குவழி ஏணி வழிகாட்டும்
இல்லையென்றால் வீம்பான பாம்புகள் நம்மை தீண்டிவிடும்
தான்தப்பிக்கவும் மாற்றானை சிக்கவைக்கவும் செய்யும்பணம்

பணமுள்ளவன் குற்றம்செய்ய பரிந்துபேச பலநாக்கு நீளும்
பணமில்லையேல் இல்லாதவனின் நாக்கைவெட்ட தீயகத்தி வரும்
தண்டனை கொடுக்க சட்டமிருக்கு சட்டத்திலோ ஓட்டையிருக்கு
ஓட்டைக்குள் தப்பியோடும் சுண்டெலியாய் தப்புத்தண்டா ஓடிவிடும்

பதவி கையிலிருந்தால் குற்றம் பற்றி கவலையில்லை
உதவி செய்திட அராஜகமும் அகங்காரமும் காத்திருக்கு
எல்லோருமே குற்றவாளிகளே அதை தட்டிக்கேட்காததாலும் பொருட்படுத்தாதாலும்
குற்றத்தின் வாழ்நாள் கூடிவிட்டது பணமருந்து போடுதுவிருந்து...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:41 am)
Tanglish : ethu kutram
பார்வை : 1382

மேலே