கொத்தடிமை
ஆத்தோரம் குடிசைபோட்டு வாழுகின்ற ஏழை நானே
உழைப்போரம் மனசை போட்டு உழைக்கின்ற வம்சம் தானே
பாடுபட்டு உழைத்திடினும் கால் வயிறு காணலியே
கிழக்கு வெளுக்கும் நேரம்முன்னே
கூவிடுதே கொண்டை சேவல்
கொண்டை சேவல் கூவும்முன்னே
கூவிடுதே பண்ணை ஆட்கள்
அடிமைபட்ட வாழ்வதனில் நொந்துவிட்ட எங்கள் வாழ்வே
நாற்றுநடும் போது மட்டும் உயிரே போகும் இடையதனில்
நிமிர்ந்து நிற்க்கும் நேரமெல்லாம் வந்துவிழும் வசவுமட்டும்
நெல் அறுக்கும் போதுமட்டும் மகிழ்து போகும் மனசுமெல்லாம்
கால் வயிறு கஞ்சிக்கென்றே
நெல்லை கட்டி தலையிலேந்தி
வயலோரம் போகும் மட்டும் உயிரே போகும் மூச்செனவே
மூச்சுவாங்கும் நேரந்தன்னில் தாகம் தீர்க்க வழியே இல்லை
பச்சைகுழந்தை தூளியிலே கத்திகதறி போயிடினும் பாலூட்ட வழியுமில்லை
கொத்தடிமை வாழ்வதனில் விடிவுகாலம் ஏதுமில்லை