Puthiyathor ulagam seyivom
ஊருக்கொரு பள்ளியை
கட்டிக் கொடுப்போம்
இலவசமாய் கல்வியை
கற்றிட வைப்போம்
மாநிலத்துக் கொரு
தொழில் சாலைகளை
அமைத்துக் கொடுப்போம்
வீட்டுக் கொரு வேலையை
போட்டுக் கொடுப்போம்
ஏரிக் குளங்களை வெட்டி
மழைநீரை சேமிப்போம்
விவசாயிகள் முகத்தில்
விழும் சுருக்கமெடுப்போம்
குடிசையை கோபுரமாய்
மாற்றிக் காட்டுவோம்
வறுமை வாய்க்க வந்தால்
இனிப் பிலமரும் ஈயென
விரட்டியடித்திடுவோம்
வீட்டுக் கொரு காற்றாடி
நட்டுக் கொடுப்போம்
தாமாக மின்சாரத்தை
பெற்றிட வைப்போம்
இல்லை என்ற சொல்லை
கிள்ளி எரிவோம் களைகள்
இல்லா பயிர் வளர்த்து
வெள்ளாமை குவிப்போம்
பஞ்சத்தை பஞ்சாக்கி
நூலாய் திரிப்போம்
ஆடை நெய்து பாமறர்க்கு
உடுத்தி அழகு பார்ப்போம்
நாடு காக்க இளைஞராய் தேர்ந்து
எடுப்போம் அவரை
ஆளவைத்து பார்த்து நாமும்
மீசையை முறுக்குவோம்
நாடு விட்டு நாடுப் போக
நாங்கள் மறுப்போம் அயல்
நாட்டவரை இங்கழைத்து
பிழைக்க சொல்வோம்
வாய் பிளந்து பார்ப்பார்
அயல் நாட்டார்கள் சதா
நம்மையன்றி வேறுப்
பேச்சை பேசமாட்டார்
முறுக்கிற்க்கு மாவு பிழிந்து
சட்ட முறுக்கு சுட்டெடுப்பர்
முறுக்கையே பிசைந்து உடைத்து
நொறுக்கி நல்ல
நடைமுறைக்குத்தக
சட்டம் தீட்டிடுவோம்
இன்னொரு கைகளை
எதிர்பார்க்காமலேயே
கையில் உள்ளதை வைத்தே
பல நல்லதை செய்வோம்
புதுப்புது பதுமைகளை
செய்து காட்டுவோம் உலகே
பிரம்மித்து போகும்படி
பெருமைச் சேர்ப்போம்
இதுவரை நடந்தது யாவும்
நண்மையோ தீமையோ அதனை அடியோடு
நாமும் மறந்தொழிப்போம்
சோம்பாமல் சுயமாய்
சுதந்திரமாய் இங்கணம் இனி ஒரு
விதி செய்வோம்