உள்ளத்தின் நிறம் வெண்மை

உள்ளத்து நிறமென்றும் வெண்மை யென்றால்
உற்சாகம் உடன்வந்து குடி புகுமே
உள்ளுக்குள் அழுக்கதனை அப்பிக் கொண்டால்
உதவாது ஒருபோதும் பிறர் மனமே
சொல்லுக்குள் இனிமைகூட்டி இதயத்தில் விடமுமேற்ற‌
செல்லாத காசாகும் நமது வாழ்க்கை
பல்லுக்கு வெளிர்நிறத்தை பகட்டாக அடித்திட்டாலும்
தள்ளியே சென்றிடுவர் தெரியாமல் வாய்திறந்தால்

உதவிகள் செய்யும்மனது நிறங்களை கண்டிடாது
உதவிகள் செய்யும்பேர்க்கு மொழிகளும் குறுக்கிடாது
பதவியில் இருப்போர்போல ஒளிப்படம் எடுத்துதன்னை
பெருமையாய் காட்டிக்கொள்ள அவர்மனம் நினைத்திடாது
நமக்குள்ளே இருக்கும்அன்பு பாசத்தை யெல்லாம்சிறிது
நம்மோட இருக்கும் ஏழைஎளியவர் அனைவருக்கும்
இலவசமாய் பிரித்துக்கொஞ்சம் இன்முகமாய் கொடுத்துவிட்டால்
இழப்பென்று ஒன்றுமில்லை யோசிப்போமே அன்புள்ளோரே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 11:04 am)
பார்வை : 2482

மேலே