மூச்சு போகா இடைவெளியில் வியர்வை கொள்ளுதே,

ஆண்;
மூச்சு போகா இடைவெளியில் வியர்வை கொள்ளுதே
தடுமாறும் எண்ணங்கள் தடம் மாற சொல்லுதே
பெண் பூ வாசம் அதை என்னில் கண்டேன்
பெண்;
இதயம் வேகம் கூடையில் மௌனம் கொள்ளுதே
தாவணி பூ வே நா தவிக்க விடை தேடுதே
கண் காதல் பேசும் அதை என்னில் கண்டேன்
ஆண்;
பருவம் வந்த புன்னகையே
என் பனி சாரல் பெண்மையே
அனல் வீசும் தனிமையில் நிலாக்காற்-றாய்
என் மார்பில் கோர்க்கும் பன்னீர்-ரே
பெண்;
பருத்தி நூல் நெய்த வெண்மையே
என் காதல் தூய்மையே
உன்னில் மயங்கிறேன் உன்னால் மலர்கிறேன்
என் காதல் கண்ணீரே
உந்தன் மூச்சு காற்றில் எந்தன் உயிரை சுமப்பேன்
உந்தன் எச்சு காற்றில் எந்தன் காதலை வளர்ப்பேன்
ஆண்;
காற்று வீசும் தூரம் காதல் வீசும்
காற்று வீசா நேரம் வேகம் கூடும்
காற்று வீசும் தூரம் காதல் வீசும்
காற்று வீசா நேரம் காதல் வேகம் கூடும்
தனிமையில் இனிமையில் தவிக்க காதல் போதும்
அன்பே உந்தன் மூச்சு காற்றில் எந்தன் உயிரை சுமப்பேன்
பெண்;
கண்ணே உந்தன் எச்சு காற்றில் எந்தன் காதலை சுமப்பேன்
மூச்சு காற்றில் காதல் பேசி தாய்மை ஆக்கினாய்
உந்தன் உயிரை போர்த்தி என் குளிரை போக்கினாய்
ஆண்;
விரல் கோர்க்கும் ஆசையில் நிஜமாய் வருவேன்
பெண்;
தினம் பேசும் வார்த்தையில் என் நிழலை தொலைத்தேன்
ஆண்;
மனம் முடிக்கும் வேளையில் உனை படித்தே இருப்பேன்
பெண்;
பார்த்த படத்தை பார்க்க உனை முறைப்பேன்
ஆண்
பால் இதழை பருக தீயாய் கொதிப்பேன்

பெண்;
காதல் தீ இட்டு வியர்வையில் குளிப்பேன்
ஆண்;
சுட்ட பாலை தீ யிட்டு எரிப்பேன்
பெண்;
மோக தீயை நீர் இட்டு அணைப்பேன்
அன்பே உந்தன் மூச்சு காற்றில் எந்தன் காதலை சுமப்பேன்
கண்ணே உந்தன் எச்சு காற்றில் எந்தன் கவிதையை சுமப்பேன்

எழுதியவர் : krishna (26-Apr-16, 1:43 pm)
சேர்த்தது : krishna puthiran
பார்வை : 80

மேலே