மாலையின் நிறம் மஞ்சள் -கார்த்திகா
நிலமெங்கிலும் நெருஞ்சி முட்கள்
தொட்டுத் தழுவ மறுக்கும் காற்று
மூச்சைத் திறந்து வெப்ப மண்டலம்
உள் நுழையத் துடிக்கும் பகல்
விண்மீன்களை எரியவிட்டு
விரட்டும் இரவு சூரியன்கள்
விரல்களில் வழியும் பால் நிலவு
கண்களில் பொங்கும் காதல்
நேரங்கள் கடந்து பொழுதுகள்
நாட்களாகிப் பிரிந்ததிலும்
இமைக்காமல் விழி விரித்துக் கிடக்கின்றன
என் மஞ்சள் பொழுதுகள்!