சுரங்கப் பாதையைத் தோண்டி அது வழியாக்கூட பணங்கடத்துவானுக
அய்யா, அய்யா.என்னோட...
@@
என்னய்யா காவல் நெலையத்திலெ நொழையற போதே அய்யா நொய்யான்னு கத்திட்டு வர்ற?
@@
அய்யா, அய்யா இன்சுபெக்டர் அய்யா. நான் ஒரு அமரர் ஊர்தி வச்சிட்டு அதிலெ கெடைக்கற வருமானத்திலெ எங் குடும்பத்தக் காப்பாத்திட்டு
வர்றேன்நம்ம நகரத்திலெ மொத்தம் மூணு அமரர் ஊர்திங்க தாங்க இருக்குதுங்கய்யா. அதிலெ ரண்டு ஊர்திங்க சவத்தை ஏத்திட்டு வெளியூருக்குப்
போயிருச்சுங்கய்யா, என்னோட அமரர் ஊர்தியை ஆசுபத்திரி கேட்டுக்குப் பக்கத்திலே நிறுத்திட்டு சாப்படப் போயிருந்தங்கய்யா. . அந்த சமயத்திலே
யாரோ அதைக் கடத்திட்டு போயிட்டாங்கய்யா.
@@@
யோவ். நீ சொன்னதை உன்னோட வண்டி பதிவு என்னோட எழுதிக் கொடு. நா ஒடனே எஸ்.பி அய்யாவுக்குத் தெரிவிச்சு ஐஜி/டிஜிபி
அய்யாவுக்கெல்லாம சொல்லச் சொல்லி தமிழ் நாட்டிலே இருக்கற எல்லா அமரர் ஊர்திகளையும் சோதனை போடச் சொல்லறேன். ஆம்புலன்ஸ்ல
கோடி கோடியா கடத்தறவங்க அமரர் ஊர்திகளப் பயன்படுத்திக் கூட கோடிக்கணக்கில பணம் கடத்த வாய்ப்பு இருக்கும். நாங்க தான் எச்சரிக்கையா
இருக்கணும். சென்னையிலே இருந்து கன்னியா குமரி வரைக்கும் சுரங்கப் பாதையைத் தோண்டி அது வழியாக்கூட பணங்கடத்தவானுக கபோதிப்
பசங்க. ச்சே தேர்தல் வந்தாலே போலீஸ்காரங்க நாய்படாத பாடு படவேண்டியிருக்குது.