உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க

நீங்க தான் வம்பீரோட பெற்றோரா?

@@@@@@@

ஆமாங்க ஐயா.

@@@@@

உங்க பையனுக்கு எதுக்கு 'வம்பீர்'னு பேரு

வச்சீங்க? வகுப்பில் உள்ள மற்ற

பையன்கள்கிட்ட வம்பிழுக்கிறதே

அவனுக்கு முழுநேர


வேலையா இருக்குது. பாடங்களைக்

கவனிக்கிறதில்லை.

@@@@@

நாங்க மட்டை ஆட்ட (கிரிக்கெட்) வீரர்

கவுதம் கம்பீரோட இரசிகர்கள். அதனால்

அது மாதிரி பேரை எங்க பைய்னுக்கு

வச்சா எதிர்காலத்தில் எங்க பையனும்

பிரபல மட்டை ஆட்ட வீரனா வருவான்னு

அவனுக்கு 'வம்பீர்'னு பேரு வச்சோமுங்க

ஐயா.

@@@@@@

உங்க பையன் வம்பிழுக்கிறத

நிறுத்தணும்னா அவன் பேரைக் கண்டிப்பா

மாத்தணும். 'வம்பீர்'ங்கிற அவன் பேரே

அவனை வம்பு செய்யத் தூண்டுது.

அவனுக்கு வேற இந்திப் பேரை வையுங்க.

வம்பீரை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க.

அவன் பேரை மாத்துணத்துக்கப்பறம்

பள்ளிக்கு அனுப்புங்க. கண்டிப்பா தமிழ்ப்

பேரை உங்க பையனுக்கு வச்சிடாதீங்க.

அதை எங்க பள்ளி நிர்வாகம்

ஏற்றுக்கொள்ளாது.

@@@@@@@

சரிங்க ஐயா.

எழுதியவர் : மலர் (30-Jul-25, 8:37 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே